பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று உமையாள்புரம் பொதுநோக்கு மணடபத்தில் நடைபெற்றது.

466

 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று உமையாள்புரம் பொதுநோக்கு மணடபத்தில் நடைபெற்றது.

இலண்டன் கற்கப விநாயகர் ஆலய நிர்வாகியும் கொடைவள்ளலுமான கோபாலகிருஸ்ணனின் அனுசரணையுடன் தானியம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த கலந்து கொண்ட கிளிநொச்சி பூநகரி பிரதேச அமைப்பாளர் சிறீரஞ்சன் உரையாற்றுகையில்

கிளிநொச்சி மண்ணின்  வரலாற்று பெருமை மிக்க ஊராக இருக்கின்ற உமையாள்புரத்தின் மக்களுடன் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம்  மகிழ்ச்சிக்குரியது. தம்முள்ள நீண்டதொரு வரலாற்று உண்மைகளை வைத்திருப்பவர்களாக உமையாள்புரம் மக்கள் இருக்கின்றார்கள். வரலாற்றை மறைத்து எமது சமூகத்தை திரிபுபடுத்திய பாதைக்குள் திணிக்க நினைக்கின்றவர்கள் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதன் மத்தியில் நின்றுகொண்டு எம்மை நிலை நிறுத்த பாடுபடுபட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்கு நாம் பல்வேறு வழியில் முயல்கின்றோம். எம்முள்ளே உறங்குகின்ற வரலாற்று உண்மையை யாராலும் எடுத்து எறிய முடியாது என்ற துணிவும் நம்பிக்கையும் எம்மிடம் இருக்கின்றது. எமது மண்ணில் கட்டியெழுப்பப்படும் வாழ்வின் அங்கங்களில் எமது வியர்வையும் உழைப்பும் கலக்கின்ற போது எமது சமூகத்தின் மீதான பற்றுணர்வு நம்மிடம் தானாக பற்றிகொள்ளும். அத்தகையதொரு நம்பிக்கை தருகின்ற முயற்சிக்காக கொடை வள்ளலான கோபால் அண்ணன் அவர்கள் தொடர்ந்து எமது மக்களுக்கு உதவி வருகின்றார்.

வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதில் இலண்டன் கற்பக விநாயகர் ஆலயம், அகிலன் அறக்கட்டளை போன்றவற்றின் பங்கு கணிசமானது. சுயதொழில் தொழிற்பயிற்சி வாழ்வாதாரம் கல்வி என பல்வேறு மூலங்களுக்கு தன் உதவிக்கரத்தை கோபால் அண்ணன் அவர்கள் நல்கி வருகின்றார். நமது விவசாயத்துறைக்கும் தன் உதவிகளை, பசுமைத்தேசம் திட்டத்தினூடாக வழங்குவது நன்றிக்குரியது.

இந்த விதை தானியங்களை வீட்டை சுற்றி ஒரு சிறு வீட்டுத்தோட்டத்தை அமைத்து பயன்பெற நிச்சயம் உதவும். இதை கரிசனையோடு எல்லா மக்களும் விதைத்தால் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மாற்றத்தை எமது சமூகத்தில் உணர முடியும் என்றார்.

மாதர் அமைப்பு நிர்வாகி திருமதி சாந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலண்டன் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகியும் அகிலன், அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரும் கொடை வள்ளலுமான கோபாலகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பரந்தன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் தவபாலன், பூநகரி பிரதேச கட்சியின் அமைப்பாளர் சிறீரஞ்சன் அகிலன், அறக்கட்டளையின் இலங்கைக்கான இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், உமையாள்புரம் மாதர் சங்க செயலாளர் துஸ்யந்தி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஈசன், கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உபதலைவரும் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளருமான பொன்.காந்தன் மற்றும் உமையாள்புரம் கிராமத்தின் பொது அமைப்புக்களின் நிர்வாகிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

 

SHARE