“பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே யானை தன் தலையில் மண்னை போட்ட கதை போன்றதே அமையும்:”

640

தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் இன்று (10.3) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எமது கட்சியின் கருத்தாக இல்லாமல் எனது கருத்தாக தெரிவுக்குழு விடயத்தில் சிலவற்றை செல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே பிரச்சனையை உருவாக்கி கொள்வதாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதுவரை காலமும் பல விதமான குழுக்கள் தமிழர்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

சந்திரிக்கா காலத்தல் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டது. அந்த வரைபை முன்வையுங்கள். திஸ்ஸவிதாரன குழு ஒரு அறிக்கையை தந்துள்ளது. அதனையும் முன்வையுங்கள். இன்னும் வேறு வேறு அறிக்கைகள் இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக தரப்பட்டுள்ளன அவற்றையெல்லாம் முன்வைத்து அதனை மையமாக கொண்டு அதனை அடிப்படையாக கொண்டு பாராளுமன்ற தெரிவுக்குழு விவாதிப்பதாக இருந்தால் எமது தமிழ் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நம்புகின்றேன்.

ஏனென்றால் அடிப்படையை நிர்னயித்து அதனை செயற்படுத்தாது விட்டோமானால் அங்கு நாம் செல்வதால் எந்தவிதமான பலனும் கிடையாது இருப்பதையும் நாம் இழந்து வரும் கட்டம் ஏற்படக்கூடும்.

SHARE