பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நாடு முழுவதும் நடக்கிறது-2 நாட்கள் ஐபிஎல் போட்டி இல்லை

633

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாராளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக ஏப்ரல் 16–ந் திகதி முதல் 30–ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. அங்கு 20 போட்டிகள் நடத்தன.

2–வது கட்டமாக இந்தியாவில் தேர்தல் முடிந்த நகரங்களில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகள் மே 2–ந் திகதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்து உள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நாடு முழுவதும் நடக்கிறது. இதையடுத்து நாளையும், நாளை மறுநாளும் ஐ.பி.எல். போட்டிகள் கிடையாது.

நாளை ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் போலீசாரின் முழு கவனமும் அதில் இருக்கும். நாளை மறுநாள் பல்வேறு கட்சியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புக்கு போலீசார் சென்றுவிடுவார்கள். இதனால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என்பதால் 2 நாட்கள் (16,17–ந் திகதி) ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை.

அடுத்த போட்டி வருகிற 18–ந் திகதி நடக்கிறது. ராஞ்சியில் நடக்கும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்– பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

SHARE