பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் வழங்குமா?

402
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டன், சுவீடன் நாடாளுமன்றம் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 28ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் கூறுகையில், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தருணம் வந்துள்ளது.
எனினும், எப்போது, எப்படி அந்த முடிவை எடுப்பது என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

பாலஸ்தீனப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையைப் போக்கும் விதமாக, அந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SHARE