பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் இந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளன.

483

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் இந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள பாலியல் தொழில் தொடர்பிலான சட்டமூலம் இன்னமும் பாலியல் தொழிலாளர்களை குற்றவாளிகளாகவே காண்பதாக விவாதத்தின் போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கனடாவில் நடப்பில் இருந்த பாலியல் தொழில் தொடர்பிலான சட்டத்தினை அரசியல் யாப்புக்கு ஒப்புடையது அல்ல எனக்கூறி கனேடிய உச்சநீதிமன்றம் முடக்கியுள்ள நிலையில்- அதே நீதிமன்றில் இந்த புதிய சட்டம் தொடர்பிலான விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வாரத்தின் கடந்த நான்கு நாட்களாக கனேடிய நாடாளுமன்றின் நீதி விவகாரக் குழு இது தொடர்பிலான விவாதங்களை நடாத்தியுள்ளதுடன்- அதில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள்- புதிய சட்டம் பாலியல் தொழிலை சட்டவிரோதமானதாக காண்பதாக தெரிவித்துள்ளனர்.

பொதுவான இடங்களிலும்- சிறுவர்கள் நடமாடக் கூடிய இடங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனைக் காரணம் காட்டி- இந்த விவகாரத்தினை சட்டவிரோதமானதாக காட்டப்படுவதாக அவர்கள் விபரித்துள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கக் கூடிய நிலையில்- இந்த சட்டம் பல்வேறு மனித உரிமை தொடர்பிலான சவால்களையும் எதிர்நோக்க கூடும் எனவும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த புதிய சட்டம் கனேடியர்களையும்- தமது சமூகத்தையும் அபாயகரமான செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் மிகவும் கடுமையான வகையில் இயற்றப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பிலான விவாதத்தினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய கனடாவின் நீதி அமைச்சர் பீட்டர் மக்கீ தெரிவித்துள்ளார்.

கனேடிய அரசாங்கத்தினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம்- பாலியல் சேவைகளை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கான தண்டனைகளை விதிப்பதுடன்- பாலியல் தொழிலாளர்களை நேரடியாக குற்றஞ்சாட்டாவிட்டாலும்- பாலியல் சேவைகளை பொது இடத்தில்- சிறுவர்கள் நடமாறும் இடங்களில் விற்க முற்படுவதை குற்றச் செயலாக வகைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE