பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரிப்பு

343
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவது 5 மடங்காக அதிகரித்துள்ளதாக பாலியல் சார்ந்த நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவது 2005 ஆம் ஆண்டை விட 2014 ஆம் ஆண்டு 5 மடங்காக அதிகரித்துள்ளது.

2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆயிரம் பெண்களில் இருவருக்கே எச்.ஐ.வி தொற்று காணப்பட்டது. எனினும் 2014 ஆம் ஆண்டில் இது 10 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இரண்டாயிரத்து 74 எயிட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு 229 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள். 40 வீதமானவர்கள் ஆண்கள். தாயின் கருவில் இருக்கும் போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 71 குழந்தைகள் உள்ளனர்.

நாடு முழுவதும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 75 வீதமான பெண்கள் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளனர் எனவும் மருத்துவர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE