பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில் அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டம்

326

 

வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரி இன்று நாடெங்கிலும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பெண்கள் அமைப்புகள், பெண்கள் வலையமைப்புகள், மனித உரிமைகள் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்கீழ் மட்டக்களப்பு காந்திப்பூங்கா அருகில்  அமைதியான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

வாய்களில் கறுப்பு துணிகளைக்கட்டிக் கொண்டு  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பாலியல் வன்முறைகளுக்கான நீதியை வேண்டி நின்றனர்.

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு துரிதமான சட்டநீதிகோரல், பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகளை எங்களது நாட்டிலும் சமூகத்திலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று மக்கள் உறுதியெடுத்தலை நோக்காக கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது வன்முறைகளை தடுப்பதற்கான உறுதிமொழியாகக் கொண்டு கையெழுத்துப்பெறும் பணிகளும் இடம்பெற்றது.

SHARE