‘தமிழ் படங்களை விட்டு விட்டு நான் ஏன் இந்திக்கு போகணும் என்றார் சூர்யா. இதுபற்றி சூர்யா கூறியது:மலையாள படம் ‘ஹவ் ஓல்டு ஆர் யு ரீமேக் செய்வதன் மூலம் தமிழில் ஜோதிகாவை நடிக்க வைப்பதுபோல் கன்னடம் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கிலும் அவர் நடிப்பாரா என்கிறார்கள். முதலில் இப்படத்தை தமிழில் உருவாக்குகிறோம். அது எந்தளவுக்கு பொருந்துகிறது என்பதை பார்த்துத்தான் அடுத்த படம் பற்றி முடிவு செய்யப்படும். மலையாள படமாக இருப்பதால் தமிழுக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் மாற்றி அமைக்கப்படும். ‘அஞ்சான் படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ் என்ற படத்தில் நடிக்கிறேன். அவர் இயக்கிய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடன் இணைவது நல்ல அனுபவமாக இருக்கும். இப்படம் முடிந்த பிறகு டைரக்டர் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன் . பாலிவுட்டில் ‘ரத்த சரித்திரா படத்தில் நடித்த பிறகு இந்தியில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். தென்னிந்திய படங்களில் நடிப்பதில் எனக்கு போதுமான திருப்தி இருக்கிது. ரசிகர்கள் ஆதரவும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படி இருக்கும்போது தமிழ் படங்களை விட்டுவிட்டு வேறு மொழி படங்களுக்கு நான் ஏன் போகணும்.இவ்வாறு சூர்யா கூறினார்