பால்கனி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி: பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்

158

 

அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 6 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.அமெரிக்காவின் பெர்க்லே பகுதியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் மாணவர் ஒருவரின் பிறந்தநாளை அவரது நண்பர்கள் கொண்டாடிகொண்டு இருந்தனர்.

விழாவில் 14க்கும் மேற்பட்ட மாணவர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் பால்கனியில் உற்சாகமாக கூச்சல் போட்டுகொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென பால்கனி இடிந்து விழுந்தது.

இதில் ஆறு மாணவர்கள் பலியானதாகவும் 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸ் அதிகார் ஒருவர் கூறுகையில், பால்கனி இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மற்ற இருவர் மருத்துவமனையில் மரணமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இறந்தவர்களில் 5 பேர் அயர்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ba_de_001

SHARE