பிஃபா உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்: கோலி

662

கால்பந்து உலகக் கோப்பையை ஜெர்மனி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

ஜெர்மனி அணியில் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனி மிகவும் ஆபத்தானது. எனது ஆதரவு ஜெர்மனிக்குதான். இந்த ஆண்டு ஜெர்மனிக்கு ராசியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஜெர்மனியின் ஃபிலிப் லாம், எனக்குப் பிடித்த வீரர். அணியில் உள்ள மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கு அருமையான வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தருவார். அவருடைய தந்திரமான கால்பந்தாட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகிய வீரர்களும் பிடித்த வீரர்கள். அவர்களை சந்திப்பது சிறப்பாக இருக்கும். எனது பார்க்க விரும்புபவர்களின் பட்டியலில் அவர்கள் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.

ரவீந்திர ஜடேஜா சிறப்பாக கால்பந்து விளையாடுகிறார். பந்து தன்னிடம் உள்ளபோது அவர் தன்னை ரொனால்டோவாக நினைத்துக் கொள்கிறார். கால்பந்தில் அவர் செய்யும் யுக்திகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். நான் நடுகள வீரர். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை தோனி சிறந்த கால்பந்து வீரர்.

கடந்த ஜூன் மாதம் தில்லியில் நடைபெற்ற கண்காட்சி கால்பந்து போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியின் வீரரான திதியர் ட்ரோக்பாவுடன் விளையாடியது அற்புதமானது என்று கோலி தெரிவித்தார்.

கால்பந்து விளையாடும் கோலி.

SHARE