பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் வருத்தம்

71

 

சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் தமிழில் பிக் பாஸ் சீசன் 7 வருகிற அக்டோபர் 1 முதல் துவங்கவுள்ளது. கமல் ஹாசனை தொகுத்து வழங்க பிரமாண்டமாக பிக் பாஸ் 7 ஆரம்பம் ஆகிறது.

தமிழில் இனிமேல் துவங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கில் ஆரம்பமாகி இரண்டு வாரங்களை கடந்து விட்டது. இந்த தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக நடிகை கிரண் வெளியேறினார்.

வெளியேறிய முக்கிய போட்டியாளர்
இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பில் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஷகீலா இரண்டாவது வாரம் எலிமினேஷனில் வெளியேறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஸ்டராக பார்க்கப்பட்ட ஷகீலா தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிவிட்டாரே என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

SHARE