பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர் ரணில்: காங்கிரஸ் கண்டனம்

409

 

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருக்க தகுதியில்லாதவர் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வழி தவறி செல்லும் மீனவர்களையும், ஊடுருவல்காரர்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாதவரே ரணில் விக்ரமசிங்க என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அவர் ரணில் விக்ரமசிங்க குறித்து, உங்கள் வீட்டில் ஊடுருகிறவர்களை நீங்கள் சுடலாம், ஆனால் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அப்பாவிகளை சுட்டால் நீங்களும் சுடப்பட வேண்டியவர் என குறிப்பிட்டுள்ளார்.

வழி தப்பி வருபவர்களையும், ஊடுருபவர்களையும் வேறுபடுத்தி பாரக்காமல் சுட்டு தள்ளுவதே தீர்வு என கருதினால், நீங்கள் பிரதமராக இருப்பதற்கு எவ்வித தகுதியும் அற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE