ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தல் சட்டம் நடைமுறையில் இருக்கும் என முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விடும். இதன் பின்னர் அரசியலமைப்புக்கு அமைய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நபர் இரண்டு வாரங்களுக்குள் பிரதம நீதியரசர் அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபின்னர் அவரது பதவிக்காலம் ஆரம்பமாகும்.
புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதி பிரதமரை நீக்கிய பின்னர் அமைச்சரைவை கலைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.