பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது.

415

 

 

நாடாளுமன்றத்தில் 19ஆம் திகதி பெரும்பான்மை

IMG_8609-e14164527898451-600x190

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

IMG_8609-e14164527898451-600x190

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர்.

இதேவேளை, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். அந்த ஐவரும் இணைந்தால், நாடாளுமன்றத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 112ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கன்னியமர்வு எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிப்பர் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE