பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய பயணத்தின் போது இலங்கை – இந்தியா இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இச்சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன