பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 23.08.2015 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

165

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  23.08.2015 அன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

unnamed (1) unnamed (1) unnamed (2) unnamed unnamed

தலதா மாளிகையில் வழிபாடுகளில்  ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும்சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவுப் ஹக்கீம் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் திறமையானவர்கள் என்பதால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல பிரதமருக்கு மாபெரும் வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டார். அத்தோடு பிரதமருடன் பிரதேச பொதுமக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

பிரதமரின் கண்டி விஜயத்தில் அவரது பாரியார் திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவும் இணைந்து கொண்டிருந்தார்.

SHARE