பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா- முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

170

பொருட்களின் விலைகள் குறைவு என்று கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றாரா என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். இது அப்பட்டமான ஓர் பொய்யாகும்.

என்ன பொருளின் விலை குறைந்துள்ளது என நாம் கேட்கின்றோம். ரணில் பகல் கனவு காண்கின்றார்.

ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தில் நட்டமாம். இரண்டு விமான நிலையங்கள் தேவையில்லை என்றால் ஏன் ரணில் மொனராகல் சென்று விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ரணில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றார்.

மக்கள் இந்த ஏமாற்றுப் பேச்சுக்களை நம்ப மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE