பிரதான கட்சிகள் தகமையை இழக்கும் பட்சத்தில் எண்ணிக்கையில் த.தே.கூ எதிர்கட்சி

374

 

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு முறையாக அறிவிக்கப்பட்டால் செயற்பாடுகள் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் நேர்மையாக நடந்துகொள்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

imagesZCHO2DLW

அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன.நாட்டின் இரு பிரதான கட்சிகள் அப்பதவியை வகிக்கும் தகமையை இழந்திருந்தால் பாராளுமன்றத்தில் கூடுதலான உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த வகையில் த.தே.கூ இற்கு வரவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளதாக குறிப்பிட்டார்.

நாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் மலையகத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதையும் தலைவர் இரா.சம்பந்தன் இங்கு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா அவர்களின் தலைமையிலான குழுவிலிருந்தவர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஐ.ம.சு.கூ பிரதான எதிர்கட்சி தகமையை இழப்பார்களானால், எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றார். பாராளுமன்ற மரபுகளின்படி அவ்வாறான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெரிவித்துள்ளோம்.

மேலும் இலங்கை பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படக் கூடும் என்ற சூழல் நிலவினாலும், எதிர்கட்சித் தலைவர் பதவியையும் அதையும் தொடர்புபடுத்தக் கூடாது என்று மேலும் தெரிவித்தார்.

SHARE