அஜித் எப்போதும் தனக்கு பிடித்த இயக்குனர் என்றாலும், 2 முறைக்கு மேல் வாய்ப்பு கொடுப்பது அரிது. அப்படியிருக்க ஒரு இயக்குனருக்கு 3வது முறையாக வாய்ப்பு கொடுக்கவுள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை ‘வீரம்’ சிவா தான். வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தல-56 படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்ட, அஜித் முடிந்த வரைக்கும் படத்தை பார்த்தாராம், பார்த்த வரைக்கும் மிகவும் பிடித்து விட்டதால், மறுபடியும் நாம் ஒரு படத்தில் இணைகிறோம் என்று கூறிவிட்டு சென்றாராம். இப்படிதான் வீரம் படப்பிடிப்பிலும் அஜித் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.