பிரபல நடிகரின் மருமகனாகும் கே.எல்.ராகுல்? அவரே கூறிய தகவல்

12

 

பிரபல இந்தி நடிகரான சுனில் ஷெட்டி, தனது மகள் அதியா ஷெட்டிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரரும், லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான கே.எல்.ராகுல், பிரபல இந்தி நடிகரான சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை காதலித்து வருகிறார்.

சமீபத்தில் இருவரும் காதலித்து வருவதை பொதுவெளியில் ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மையில்லை என அதியா ஷெட்டி தரப்பில் கூறப்பட்டது.

பிரபல நடிகரின் மருமகனாகும் கே.எல்.ராகுல்? அவரே கூறிய தகவல்

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சுனில் ஷெட்டியிடம், ராகுல்-அதியா திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ‘எனக்கு கே.எல்.ராகுல் மிகவும் பிடிக்கும். திருமணம் குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும். என் மகள் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து தான் ஆக வேண்டும். விரைவாக அது நடந்தால் நல்லது. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. என்னுடைய ஆசிர்வாதம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE