பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், வாஸ்குணவர்தனஉள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

535


கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ட்ரயல் அட்பார் முறையில் முன்னெடுக்கப்பட உள்ளது. எதிர்வரும் 16ம் திகதி முதல் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், வாஸ்குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூவர் அடங்கிய நீதவான் குழமொன்று இந்த வழக்கு விசாரணைகளை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை  உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. பத்து குற்றச்சாட்டுக்களில் ஏழு குற்றச்சாட்டுக்கள் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், வாஸ்குணவர்தனஉள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE