பிரபாகரனின் போராட்டத்தின் பின்னர் மஹிந்தவின் அரசியல் காய்நகர்த்தல்கள்

928

நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை கையிலெடுத்துக்கொண்டு தமிழ்மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்கின்ற நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது நெறியாண்மையை வெளிப்படுத்தத் தொடங்கினார். 1947 ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை நடை முறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கை நன்கு பரிட்சயமானதுமான பாராளுமன்ற முறைமையினை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் கீழ் உருவாக்கப்பட்டதே நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆகும்.

அரசயில் அமைப்பின் 31ஆம் உறுப்புரையில் ஜனாதிபதிக்கு இருக்கவேண்டிய தகைமைகள் தொடர்பாக பார்க்கின்றபொழுது,
1. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. 30 வயதினைக் கடந்திருக்கவேண்டும்.
3. 2 தடவைகளுக்கு மேல் மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். (இவ்விதி அரசியல் அமைப்பின் 18ஆம் சீர்திருத்தத்தின் ஊடாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஜனாதிபதியாக இருக்கலாம்)
4. அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ இருத்தல் வேண்டும். (வேட்பாளர் பட்டியலில் தகுதி பெற்ற எவரும் ஜனாதிபதியாக போட்டியிடலாம்)
5. குற்றம் செய்ததற்கான தண்டனை பெறாதவராக இருத்தல் வேண்டும்.
6. புத்தி சுயாதினம் உடையவராக இருத்தல் வேண்டும்.
7. ஜனாதிபதி வேட்பாளர் அரசி யல் கட்சியினூடாக போட்டியிட்டால் 50000ரூபாவும், சுயேட்சையாக போட்டியிட்டால் 75000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்தவேண்டும்.

1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதியானவர் மக்களால் விகிதாசார பிரதிநிதித்துவத்தில் தனிமாற்று வாக்குரிமை ஊடாக தெரிவுசெய்யப்படுகின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது முழு இலங்கையில் ஒரே தேர்தல் தொகுதியாக கணிப்பிடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறும். 51மூ வாக்கைப்பெற்றால் ஜனாதிபதியா கத் தெரிவுசெய்யப்படுவார். இதுவரை இலங்கiயில ;நடைபெற்ற தேர்தல்களில் வாக்கு கணிப்பீட்டு வெற்றியின் படி,
1982 – 52.7, 1988 – 50.4, 1994 – 62.2, 1999 – 51.9, 2005 – 50.3, 2010 – 57.0 என்ற ரீதியல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டமையினால் இரண்டாம் கட்ட வாக்குக்கணிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி உயர் நீதிமன்ற உயர் நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து தமது பதவி யினைப் பொறுப்பேற்பார். 1978 ஆம் ஆண்டின் யாப்பின்படி ஏற்படுத்தப்பட்ட ஜனாதிபதித்துவ ஆட்சி முறைமையா னது தனியொரு நபரிடம் நாட்டின் அதிகாரங்களை ஒப்படைப்பதாக அமை கிறது.

சட்டத்துறை அதிகாரங்கள்
01. பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது கொள்கைப்பிரகடன உரையை வாசித்தல்
பாராளுமன்ற சடங்குமுறைமையானது இருக்கைக்கு தலைமை தாங்குதல்.
02. பாராளுமன்ற உறுப்பினர் இல்லாவிட்டாலும் பாரளுமன்றத்திற்கு செல்லவும் உரையாற்றவும் அவர் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொள்ளவும் அதிகாரம் உண்டு.
03. பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் அனைத்தும் எவருக்கும் உரித்துடையதாகும்.
04. பாராளுமன்றத்தை கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல் போன்ற அதிகாரங்கள். பாராளுமன்றத்தை கலைக்கும் போது 70 சரத்தின்(அ,ஆ,இ,ஈ) ஆகிய உபபிரிவுகளை அனுசரித்தே இப்பணியை மேற்கொள்ள முடியும்.

70(அ) உபபிரிவு – பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று ஒரு வருட காலத்தினுள் பாராளுமன்றம் கேட்டு கொண்டாலே ஒழிய அதனை கலைக்க முடியாது.

70(ஆ) உபபிரிவு – ஜனாதிபதியால் வாசிக்கப்படும் கொள்கை பிரகடன உரை தோல்வியடைந்தாலும் பாராளுமன்றம் கலைக்க வேண்டியதில்லை.

70(இ) உபபிரிவு – பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் போது பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
70(ஈ) உபபிரிவு – பாராளுமன்றில் வரவு – செலவு திட்டம் தோல்வியடைந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படலாகாது இரண்டாம் முறையும் வரவு – செலவு திட்டம் தோல்வியடைந்தால் பாராளுமன்றம் கலைக்கப்படல் வேண்டும்.

நிர்வாகத் துறை அதிகாரங்கள்.

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி ஜனாதிபதியானவர் அரசின் தலை வராகவும், ஆட்சி துறையில் தலைவரா கவும், ஆயுதம் தாங்கிய முப்படைகளின் தலைவராகவும் , காணப்படுவாரென யாப்பு கூறுகிறது. அவ்வகையில் நிறைவேற்றுத் துறையில் முழுமையான அதிகாரம் பெற்றவராக ஜனாதிபதி காணப்படுகிறார்.

1. பிரதமரை நியமித்தல்(பிரதமரை நியமிக்கும் போது தனக்கு நம்பிக்கையான ஒருவரையோ,கட்சியில் நம்பிக்கைமிக்க ஒருவரையோ பிரதமராக நியமிக்கலாம்.)
2. 44ஆம் சரத்தின் 01 ம் உபபிரிவின்படி அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு.
3. 44(2) உபபிரிவின் படிதான் விரும்பிய பொழுது அமைச்சரவையை கலைக்கலாம்.
4. நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் எவரையும் தமது அதிகாரத்தினூடாக அரசியலமைப்பின் 47ம் சரத்தை பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்கலாம். இவ் அதிகாரத்தை பயன்படுத்தியே 2007.02.09 திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மங்கல சமரவீர, ஸ்ரீபதி சூர்யராச்சி,அனுர பண்டாரநாயக்க போன்றோரின் பதவிகளை தாம் பொறுப்பேற்றார்.
5. அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒப்படைத்தல்.
6. அமைச்சரவையின் தலைவராக செயற்படல்
7. உயர் நிர்வாக திணைக்களத் தலைவர்களை நியமித்தல்
8. உள்நாட்டு,வெளிநாட்டு தூதுவர்களை நியமித்தல்
9. வெளிநாடுகளுடன் நிர்வாக ஒப்பந்தங்களை செய்தல்.
10. குறைகேள் அதிகாரியை நியமித்தல்.
11. பகிரங்க சேவை ஆணைக்குழுவை நியமித்தல்.
12. அமைச்சுக்களின் செயலாளர்களை நியமித்தல்.
13. அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானித்தல்.

நீதித்துறை அதிகாரங்கள்

1. பிரதம நீதியரசரை நியமித்தல்
2. உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.
3. நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல்.
4. குற்றவாளிகள் விடயத்தில் தலையிடல்
உதாரணம் :- 2010ம் ஆண்டில் சிறையிடப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களை அரசியல் அமைப்பில் 34ம் சரத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி 21.05.2012 அன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

பாதுகாப்பு துறை அதிகாரங்கள்
1.முப்படைகளின் தளபதிகளை நியமித்தல்.
2.முப்படை தளபதிகளை நியமித்தல்.
3.பாதுகாப்பு அமைச்சராக விளங்குதல் அல்லது பாதுகாப்பு அமைச்சரை நியமித்தல்.
4. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை நியமித்தல்.
5.பாதுகாப்பு அமைச்சுக்குள் உள்ளடக்க வேண்டிய விடயங்களை தீர்மானித்தல். (2010 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சுக்குள் மிக முக்கியமான 21 துறை கள் சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது)
6.போர்,சமாதான பிரகடனங்களை மேற்கொள்ளல்.
7.அவசரக்கால ஊரடங்கு சட்டம் பிறப்பித்தல்.
8.வெளிநாடுகளுடன் போர் பிரகடனம் மேற்கொள்ளல்.

இவ்வாறான அதிகாரங்களை தன்னகத்தே கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்பொழுது விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஓரங்கட்டி சிறுபான்மை இனத்திற்கு இலங்கையில் இடமில்லை என்ற அளவிற்கு அவருடைய அதிகாரம் இருந்துவருகிறது. தென்னிலங்கையில் ஒரு பேச்சும் வடபகுதியில் ஒரு பேச்சுமாக காணப்படுகிறது.

பிரபாகரனைப் பொறுத்தவரையில் 30 வருட கால போராட்ட வரலாற்றில் 6 ஆட்சியாளர்களுக்கு தன்னிகாட்டிவந்தார். பிரபாகனும் கூட தனது ஆட்சியில் போராட்டமே தீர்வு என்ற நிலைமையில் இருந்துவந்தார் மட்டுமல்லாது மக்களை நேசிக்கும் ஒருவராக பிரபாகரன் திகழ்ந்தார். இன்றைய காலகட்டத்திலும் கூட பிரபாகரனின் போராட்டத்தின் பின்னரே வரலாற்று ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தமிழ்மக்களுக்காக நடத்தப்பட்டது எனலாம். அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறைமையை ஜனாதிபதி அவர்கள் கையிலெடுத்துக்கொண்ட போதும் பிரபாகரன் அவர்கள் போராட்ட ரீதியான சட்டங்களையே கையிலெடுத்துக்கொண்டார். மக்கள் மீ அன்பு காட்டுவதில் இருவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருந்து வந்தது தவிர வேறு எந்த விடயங்களிலும் முரணான திட்டங்களையே இருவரும் கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளை ஓரங்கட்ட ஜனாதிபதியவர்கள் அதிகாரத்தை கையிலெடுத்துக்கொண்டதன் விளைவாக இன்று தமிழ் மக்களுக்குரியதான சிறப்புரிமைகளை இழந்துவிட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

பொலிஸ் காணி அதிகாரம் இரண்டுமே தமிழ் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் யுத்தமற்ற சூழ்நிலையை மாற்றியமைத்து தாய்லாந்து சிங்கப்பூர் மலேசியா இத்தாலி போன்ற நாடுக ளின் கலாசாரத்தை இலங்கை நாட்டில் கொண்டுவர ஜனாதிபதியவர்கள் முயற்சிப்பதாகவும் பௌத்தசாசனத்தில் உள்ளவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். முப்படைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தமையினால் எந்த அமைச்சர்களேனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிரபா கரனுடனான யுத்தத்தின ;பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் காய்நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களை வைத்து அல்லது தமிழ் அரசி யல் பிரதிநிதிகளை வைத்து தன்னுடைய அரசாங்கத்தை நல்லதென உலக அரங்கிற்கு காட்டும் நகர்வினையே ஜனாதிபதி அவர்கள் செய்துவருகின்றார் என்பது போராட்டத்தின் பின்னரான அரசி யற் காய்நகர்த்தல்கள் எனலாம்.
– இரணியன் –

SHARE