பிரபாகரனின் போராட்டத்தினால் தான் இன்று தமிழினம் தலைநிமிர்ந்து நிற்கின்றது

462

அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு வருகைதந்த இந்தியரசு காட்டுமிராண்டித்தனமாக பாலியல்; பலாத்காரங்களை செய்தது. இதன் காரணமாகவே பிரபாகரன் இந்தியரசுடன் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழ் பேசும் முஸ்லிம் மக்களைக்கூட இந்தியாவின் குருக்காஸ் சீக்கியப்படையினர் விட்டுவைக்கவில்லை. வடகிழக்குப் பகுதிகளில் பல பாலியல் ரீதியான சம்பவங்களும், கொலைகளும் மர்மமான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற பாணியில் தான் இலங்கையரசும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதல் சம்பவங்களை சனல் 4 என்கின்ற தொலைக்காட்சியினூடாகவும், இராணுவத்தினர் வழங்கிய தொலைபேசி படங்களுடாகவும் யுத்தக்குற்ற ஆவணங்களாக வெளியிட்டிருந்தமையைக் காணமுடிகின்றது.

போராட்டத்தை காட்டிக்கொடுத்த கூட்டமும் இந்நாட்டில் இருக்கின்றது. இவர்கள் இன்று கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இலங்கையரசினைப் பொறுத்தவரைக்கும் பிரபாகரனின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்களை சந்தோஷமாக, சுகபோகமாகவும் வைத்திருக்கின்றார்கள் என்று அர்த்தமாகாது. தமிழர்களின் போராட்டத்தை சீர்குலைத்து, இவர்களுடாக வெற்றி பெற்ற பின்னர் இவர்களை ஏணியாகப் பயன்படுத்தி உதைத்துவிட்டிருக்கின்றது அரசாங்கம். இந்த எட்டப்பர் கூட்டத்தினர் அரசிற்கெதிராக கொந்தழித்துப் பேசுகின்ற போது, அவர்களுடைய குரற்பதிவுகளை அரசு தம்மிடம் வைத்திருக்கின்றது. ஒரு காலத்தில் இவர்கள் இறைச்சித்துண்டங்களைக் கவ்வும் நாய்களாக செயற்பட்டவர்கள் என்று கூறலாம்.
ஆனால் இன்று இவர்கள் பிரபாகரனுடைய போராட்டம்; பற்றி பேசுவதற்கு அறுகதையற்றவர்கள் என்று அறிந்திருந்தும் கூட, காலத்தின் தேவை கருதி பேசுமளவிற்கு பிரபாகரனின் போராட்டம் வலுப்பெற்றிருக்கின்றது என்றே கூறவேண்டும். 30 வருடக்காலத்தில் பிரபாகரன் கண்டிராத வெற்றியை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம் என்று இந்த ஒட்டுக்குழுக்கள் செயற்பட்டுவருகின்றன. இவை கனவிலும் நடைபெறச் சாத்தியமில்லை. அஹிம்சை வழியிலான போராட்டம் மாத்திரமே தமிழ்மக்களுக்கு மீதமாகவிருக்கின்றது. அன்று, ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற பிரபாகரனின் கூற்று இன்று சரியாகவே அமையப்பெற்றுள்ளது. பதவிக்காக ஆசைப்பட்டிருந்தால், ஆயுதங்களை களைந்துவிட்டு பிரபாகரனை முதலமைச்சராகுமாறு இந்தியா கூடப் பணித்திருந்தது. ஆனால் அவர் தமிழ்மக்களின் நலன் கருதி அதனை மறுத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் பிரபாகரனை, அசோகா ஹோட்டலில் கைது செய்து இந்திய அரசு தடுத்து வைத்திருந்தபோது, இந்தியாவின் புலனாய்வுப்பிரிவினைச் சேர்ந்த ஒருவர் எம்மை நான்கு தடவைகள் ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறியபோது, அதற்கு பிரபாகரன் சிரித்துவிட்டு அப்படியானால் நான்கு தடவைகள் நான் தமிழ் மக்களைக் காப்பாற்றியுள்ளேன் எனக் கூறினார். இதுவே ஒரு சிறந்த தமிழ் மகனுக்கான எடுத்துக்காட்டாகும். வெளிநாட்டு, உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் மீண்டும் ஒரு ஆயுதக்கலாசாரத்தை உருவாக்காது, அரசுடன் போராடுங்கள். தமிழினத்தை மீண்டும் மீண்டும் காட்டிக்கொடுக்க முயற்சிசெய்யாதீர்கள். பிரபாகரனின் போராட்டம் பற்றி தற்போதைய பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவர்களும்தெரிவித்திருந்த விடயங்களை கவனிப்பது சிறந்ததொன்றாகும். தமிழ்மக்களின் ஒற்றுமையே பலமாகும்.

 

images (3) Karuna-Douglas-and-the-President (1) SRILANKA-WAR/ spotlight-16Hageem20100115270107804AS20130614-121348IHC

SHARE