பிரபாகரனை கொலை செய்ய ஐ.தே.க திட்டம் தீட்டியது: – சஜித்

339

Praba & mahendrarajahதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர் மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதம் வழங்கியது என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது.

இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது.

மாத்தையாவின் ஊடாக பிரபாகரனை கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக்கட்சியின் திட்டமாக அமைந்திருந்தது.

இந்த திட்டம் வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். எனினும் துரதிஸ்டவசமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்தையாவை கொலை செய்தனர். போரின் போது வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றியளிப்பதில்லை.

போர் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தால் மக்கள் பாராட்டுவார்கள்.

தோல்வியடைந்தால் எல்லோரியுடைய விமர்சனங்களையும் எதிர்நோக்க நேரிடும். இதுவே உலக நியதி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அண்மையில் சூரியவௌ ரன்முதுவௌ என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE