“பிரபாகரன் அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்ற போது வாய் திறக்க நானென்ன முட்டாளா?”- இரா.சம்பந்தன்தான்

436

…2009-ம் ஆண்டு மே மாதம்வரை பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், பிரபாகரன் கொல்லப்பட்டபின், அந்த டியூனை மாற்றிக் கொண்டனர். அக் கட்சியின் தூண்களின் ஒருவரான (சுமந்திரன் மன்னிக்கவும்) சரவணபவன் எம்.பி. கொடுத்த பேட்டி ஒன்றில், “எமது தலைவர் இரா.சம்பந்தன்தான் தற்போது ‘தேசிய தலைவர்’ ஆகியுள்ளார்” என்றார்.

அது அவர்களது உள் கட்சி விவகாரம். யாரையும் தேசிய தலைவர் என்று அப்பாயின்ட் செய்து கொள்ளலாம். At least, They-see-a Thalaivar to replace தேசிய தலைவர்.

இப்போது (அவர்களது) புதிய தேசிய தலைவர், முன்னாள் தேசிய தலைவர் பற்றி என்ன சொல்கிறார்?

நாம் மேலே கொடுத்துள்ள டைட்டிலை பார்க்கவும், அதைத்தான் சொல்கிறார்.

“இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989-ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் (பச்சையாக சொன்னால் கண்டித்தவர்களையும் மேலே அனுப்பி வைத்திருப்பார் தொலைநோக்கு தலைவர்).

இந்த காரணத்தினாலேயே தமிழ் அரசியல் தரப்பில் அமிர்தலிங்கம் பிரபாகரனின் உத்தரவுப்படி கொல்லப்பட்டது குறித்து மௌனம் நிலவியிருக்கலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

‘நிலவியிருக்கலாம்’ என்ன.. ‘நிலவியது’ என்பதற்கு, இரா.சம்பந்தன் இன்னமும் உயிருடன் உள்ளதே சாட்சி. அவரது கட்சியில் இருந்த முன்னாள் சகாக்களில் பலரை முன்கூட்டியே மேலே அனுப்பி வைத்திருந்தார் பிரபாகரன்.

25 ஆண்டுகளுக்கு முன் இன்று, 1989-ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி பிரபாகரனால் அனுப்பப்பட்ட ஆட்கள் சிலர் கொழும்புவில் இருந்த அமிர்தலிங்கத்தின் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்களை பாதுகாவலர்கள் தடுத்தபோது அமிர்தலிங்கம், “அவர்கள் தெரிந்தவர்கள்தான், உள்ளே வரட்டும்” என்றார்.

உள்ளே வந்த விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தின் மனைவி கொடுத்த காபியை குடித்து முடித்துவிட்டு, பிஸ்டலை எடுத்து அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றுவிட்டு, தமிழீழம் பெற புறப்பட்டு சென்றனர்.

இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் முன்னாள் தலைவரும், இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒரே தமிழருமான அமிர்தலிங்கம் மறைந்த 25 ஆண்டு நினைவு நாள் லண்டனில் நேற்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

2009-க்கு முன் இப்படியொரு கூட்டம் நினைவு நாள் நடந்திருந்தால், “மவனே..” என்று வேட்டியை மடித்துக்கொண்டு கூட்டத்துக்குள் குபீரென பாய்ந்திருக்கக்கூடிய தேசிய மனித நேய செயல்பாட்டாளர்கள், இப்போது வேறு விஷயத்தில்

SHARE