பிரபு தேவாவுக்கு பதில் சிவகார்த்திகேயன்

678
கடந்த இரண்டு வருடமாக படங்களை இயக்காமல் இருந்த பார்த்திபன் தற்போது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற பெயரில் புதிய படம் இயக்கி வருகிறார்.
தன் படங்களில் புதுமையான எண்ணங்களை கொண்டு நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் என்றே சொல்லலாம்.

இவர் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்குகிறேன் என்று சொல்லி அமலாபால், ஆர்யா, டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் என ஒரு சினிமா வட்டாரத்தையே வைத்து படம் இயக்கி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவான சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

முதலில் பிரபு தேவா இந்த படத்தில் வரும் பாடலுக்கு ஒப்பந்தம் ஆனாராம், ஆனால் அவருக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் அவருக்கு பதிலாக சிவா கமிட்டாகியுள்ளாராம்.

இந்த படத்தின் மூலம் சிம்ரன் பாடகியாக அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE