பிராட்மேனின் சாதனையை தொட்டுப் பார்ப்பாரா சங்கக்காரா?

178
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா ஒரு இரட்டை சதம் அடிக்கும் நிலையில், அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனின் சாதனை சமன் செய்வார்.

37 வயதாகும் சங்கக்காரா 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,203 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 38 சதம், 51 அரைசதமும் அடங்கும். மேலும் 11 இரட்டை சதம் அடித்துள்ளார்.

இவர் ஒரு இரட்டை சதம் அடித்தால் பிராட்மேனின் சாதனையை சமன் செய்ய முடியும். 52 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பிராட்மேன் 334 அதிகபட்ச ஓட்டங்களுடன் 12 இரட்டை சதம் விளாசியுள்ளார்.

இலங்கை அணியின் தூண்களில் ஒருவரான சங்கக்காரா, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறார்.

தற்போது நாளை தொடங்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.

SHARE