பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட கடும் புயலால் தாயார் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று காரில் பயணித்த தந்தை, தாய் மற்றும் அவர்களது நான்கு வயது மற்றும் ஒரு வயது மகன்களுடன் பாலம் ஒன்றை கடந்து செல்கையில் வெள்ளத்தால் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இதில் அந்த தந்தை மட்டும் அடித்து செல்வதற்கு முன் காரிலிருந்து தப்பித்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இதே போல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.