பிரான்ஸில் அதிர்ச்சி சம்பவம்: குளியல் தொட்டியில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்!

45

 

பிரான்ஸ் நாட்டில் குளியல் தொட்டியில் உயிரிழந்த நிலையில் 7 வயதுச் சிறுவனின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சடலம் வியாழக்கிழமை மாலை 6.25 மணியளவில் நகரில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டது.அங்குள்ள இறுதிச் சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இத்தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது.

தனது மகனை நல்லடக்கம் செய்யவேண்டும் என தெரிவித்த சிறுவனின் தந்தை, முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, அவர்கள் பொலிஸார் அழைத்துள்ளனர்.இதையடுத்து குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டின் குளியலறையில் இறந்து கிடந்த 7 வயதுச் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.

சிறுவனின் உடலின் ஒருபகுதி உறைந்து காணப்பட்டது. அத்தோடு அவன் தாக்கப்பட்டுள்ளமைக்குரிய அடையாளங்களும் இருந்துள்ளன.இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

SHARE