பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள்?

396

 

uk-election_2

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும் என எக்ஸிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

www.theguardian.com/uk

www.bbc.com/news/election/2015

 telegraph.co.uk/news/general-election-2015/11584325/full-results-map-uk-2015.html

இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள்படி இறுதி முடிவுகள் வருமானால் தற்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் ஆட்சியமைப்பதற்கு மேலும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.அதாவது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க மொத்தம் 326 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போதைய கேமரன் தலைமையிலான ஆட்சியில் கூட்டணிக்கட்சியாக இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கேமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த ஆட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளித்தால் தற்போதைய கூட்டணி ஆட்சியே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளைட் கம்ரு கட்சிக்கு 4 இடங்களும், வலதுசாரி கட்சியான யுகிப் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்துக்களிப்பை பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை ஆகிய தொலைக்காட்சிகளுக்காக நோப் மற்றும் மோரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தின.

முதலாவதாக வெளியான தேர்தல் தொகுதியில் வெற்றிபெற்றது தொழிற்கட்சி

வாக்களிக்களிப்புக்கள் முடிவுற்று மிக வேகமாக வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிள்ளன.

இந் நிலையில் முதலாவதாக வெளிவந்த Sunderland Central ‘சன்டலான் சென்றலில்’ Labour Party (தொழில்கட்சி) வெற்றிபெற்றுள்ளது.

இக்கட்சிசார்பாக போட்டியிட்ட Julie Elliott 20,959 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஆளும் கென்நவெட்டிவ் சார்பாக போட்டியிட்ட Jeffrey Townsend 9780 வாக்குகளையே பெற்றுள்ளார்.

 

SHARE