பிரித்தானிய அரசாங்கம் விடுத்த அழைப்பை இலங்கை ஜனாதிபதி ஏற்க மறுப்பு!தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர்ந்தோர் குழுக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

477
Mahinda_thinking-300x268

கிளஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்து கொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்துள்ளார்.

mahida01

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம், விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ம் திகதி கிடைத்ததாக இலங்கை அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.

புலிகளின் ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஜனாதிபதி இந்த அழைப்பை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரித்தானிய கலாசார ஊடகங்கள் மற்றும் விளையாட்டுக்கான இராஜாங்க செயலாளர் சஜிட் ஜாவிட்டிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முன்னர் பிரித்தானியா சென்றிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகள்  ஆதரவு புலம்பெயர்ந்தோர் குழுக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

images (1)france_01

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, எதிர்ப்பாளர்கள் போத்தல்களையும் வெற்று தகர பேணிகளையும், ஜனாதிபதி பயணித்த கார் உட்பட வாகனத் தொடர் மீது எறிந்தனர்.

இச் சம்பவத்தின் போது சட்ட அமுலாக்க அதிகாரிகள் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்ததையிட்டு அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.

அதேவேளை, எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாடப்பட்டதுக்காக, ஜூன் 2012ம் ஆண்டு ஜனாதிபதி லண்டன் சென்ற போது பிரதான நிகழ்வின் போது இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை என அரசாங்கம் கூறுகிறது

londan-sl-cricket-protest

SHARE