பிரித்தானிய இளவரசிக்கு ஆடை அணிய தெரியவில்லை – விமர்சிக்கும் எழுத்தாளர்

326
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனை கனடிய பெண் எழுத்தாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.கனடாவை சேர்ந்த மார்கரெட் அட்வுட்(Margaret Atwood-Age76) என்ற எழுத்தாளர், விமர்சிப்பதில் மிகவும் பிரபலமானவர்.

சமீபத்தில் இவர் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது, இளவரசி கேட்டிற்கு எந்த தருணத்தில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதே தெரியவில்லை.

பிரித்தானியாவின் முந்தைய இளவரசி டயானாவை ஒப்பிடும்போது, இவர் சற்றும் ஆடை உணர்வே(Dressing sense) இல்லாமல் இருக்கிறார்.

மேலும் இவரது ஆடை வடிவமைப்பாளருக்கு சரியான வகையில் உடை அமைக்க தெரியவில்லை என்றும் இவர் தனது ஆடை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.

SHARE