பிரியா ஆனந்த் – லட்சுமிராய் லடாய்? 

425




பிரியா ஆனந்த்-லட்சுமி ராய்க்கு இடையே பிரச்னையா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். அதர்வா, பிரியா ஆனந்த், லட்சுமிராய் நடிக்கும் படம் இரும்பு குதிரை. இதுபற்றி இயக்குனர் யுவராஜ் போஸ் கூறியது: அதர்வாவிடம் இக்கதையை சொன்னபோது துள்ளி குதித்தார். சாதாரண பைக் என்றால் பயிற்சி தேவையில்லை. ரேஸ் பைக்கான இது 8 கியர்களுடன் சிறப்பு அம்சங்கள் பொருந்திய அசாதாரண பைக். கண்டிப்பாக பயிற்சி செய்தே ஆக வேண்டும் என்றேன். பிறகு பயிற்சி எடுத்தார். இந்த பைக் ஓட்டியது சிலிர்ப்பாக இருந்தது என்றார்.Ê

இதற்கான காட்சிகள் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது. சாலை விதிகளை மதிக்காமல் ஒரு நிமிடம் செய்கிற தவறு ஹீரோவின் வாழ்வில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. அதர்வா பைக் ஓட்டும் எல்லா காட்சியிலும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருந்தார். இது இளைஞர்களை கெடுக்கும் படமாக இருக்காது. ரேஸ் காட்சிகள் முழுவதும் அதற்கான டிராக்கில் நடப்பதுபோல்தான் படமாக்கப்பட்டிருக்கிறது. அகோரம் சகோதரரர்கள் தயாரிப்பு.

ஜி.வி.பிரகாஷ் இசை. இதில் பிரியா ஆனந்த், லட்சுமி ராய் என 2 நடிகைகள் நடிக்கின்றனர். இவர்களுக்குள் லடாயா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நட்பாக பழகியதுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்தியாவின் முதல் பெண் மோட்டார் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லா பந்தய வீராங்கனையாகவே நடித்திருக்கிறார் இவ்வாறு இயக்குனர் யுவராஜ் போஸ் கூறினார்

 

SHARE