பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்

536

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 8–ம் நிலை வீரரான ரோஸ்னிக்கை (கனடா) எதிர் கொண்டார்.

இதில் ஜோகோவிச் 7–5, 7–6, (7–5), 6–4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் அரை இறுதியில் 18–ம் நிலை வீரரான லாத்வியாவை சேர்ந்த குல்பிசுடன் மோதுகிறார். குல்பிஸ் கால் இறுதியில் 6–ம் நிலை வீரரான தமெஸ் பெர்டிச்சை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தார்.

இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும், 8 முறை சாம்பியனுமான ரபேல் நாடல் (ஸ்பெயின்), சகநாட்டைச் சேர்ந்த 5–ம் நிலை வீரர் டேவிட் பெரரை சந்திக்கிறார்.

மற்றொரு கால் இறுதியில் முர்ரே (இங்கிலாந்து), மான்பில்ஸ் (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் வுரபோவா (ரஷியா) – பவுச்சார்ட் (கனடா) மோதுகிறார்கள். மற்றொரு அரை இறுதியில் மோதும் வீராங்கனைகள் இன்று தெரியவரும்.

இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் சாரா இரானி (இத்தாலி) – பெட்கோவிச் (ஜெர்மனி), சிமோனா (ருமேனியா) – சுவெட்லனா குஸ்னெட் சோவா (ரஷியா) மோதுகிறார்கள்.

SHARE