பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்: இறுதிப்போட்டியில் சபரோவாவை வீழ்த்தினார்

338
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லூசி சபரோவாவை எதிர்கொண்ட செரீனா, 6-3, 6-7, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 20-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை செரீனா வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

அவருக்கு டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகி, பயிற்சியாளர் பிராட் கில்பர்ட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

22 கிராண்ட் ஸ்லாம் வென்ற தனது சாதனையை செரீனா முறியடிப்பார் என்று ஸ்டெபி கிராப் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

SHARE