பிரேசில் தோற்றது என் வாழ்வில் மிகவும் மோசமான நாள்: பிரேசில் கோச் ஸ்காலரி

464
பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முடிந்த முதல் அரை இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை 7-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது.

இத்தோல்வி குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறியதாவது:-

ஜெர்மனியிடம் பிரேசில் தோற்றது என் வாழ்நாளில் மிகவும் மோசமான நாள் என்று நினைக்கிறேன். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் இது மிகவும் பேரழிவானதாகும்.

பிரேசில் அணியின் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றதும் இது கடினமாக வேலை என்பது எனக்குத் தெரியும். பிரேசில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், நாம் சிறந்தவர்கள். நம்மலால் செய்ய முடியும். நாம் திறமையாக விளையாடியும் தலை சிறந்த அணியிடமே தோற்றோம்.

6 நிமிடத்தில் 4 கோல்கள் அடித்தது ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. இந்த தவறுதலுக்காக எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். இறுதி போட்டிக்கு நுழைய முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறென்.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE