பிரேசில் நாட்டில் உள்ள சீரஸ் என்னும் நகரில் உள்ள சிறைச்சாலை உடைப்பு-தப்பிப்போனாரா சுபரசியமான சம்பவம்

344

உலகிலேயே படு கேவலமான சிறை உடைப்பு என்று இதனைத் தான் கூறுகிறார்கள்(டோட்டல் -சொதப்பல்). பிரேசில் நாட்டில் உள்ள சீரஸ் என்னும் நகரில் உள்ள சிறைச்சாலை உடைப்பு படங்களையே நீங்கள் பார்க்கிறீர்கள் ! கடந்த வாரம் இங்கே உள்ள 3 கைதிகள் தாம் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களைக் கொண்டு தமது சிறை, அறையில் உள்ள சுவரை சத்தம் போடாமல் உடைத்துள்ளார்கள். அதுவும் நீண்ட நாட்களாக இவர்கள் இச் சுவரை இடித்தவண்ணமே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதனை மறைக்க அதன்மேல் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள். ஒரு நாள் இரவு அவர்கள் ஆள் நுளைந்து வெளியே செல்லக்கூடிய அளவு அச் சுவரை இடைத்துவிட்டனர். மிகவும் ஆவலாக சிறையில் இருந்து அன்று இரவு தப்பித்துவிடலாம் என்று மனக்கணக்குப் போட்டுள்ளார்கள்.
8760080W014 SNPrisoner1.JPG 8760098W014 SNPrisoner4.JPG 8760098W014 SNPrisoner4.JPG 8760084W014 SNPrisoner2.JPG
இரவு வேளையும் வந்தது. அந்த மூவரும் அங்கிருந்து வெளியேற தயாராகியுள்ளனர். இதில் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டவர், மிகவும் குண்டான கைதியாம்(எடை கூடியவராம்). அவர் தான் -தான் முதலில் போகவேனும் என்று அடம்பிடித்து அந்த ஓட்டைக்குள் நுளைந்துள்ளார். தலை மற்றும் முதுகு மட்டுமே சென்றுள்ளது. அதற்கு மேல் அவரால் செல்ல முடியவில்லை. சரி செல்லவில்லை என்றால் பரவாயில்லை, வெளியே வந்தால் ஒல்லியாக இருக்கும் மற்றைய 2 கைதிகளாவது வெளியே செல்லலாமே என்று நீங்கள் நினைப்பீர்கள். அதுவும் நடக்கவில்லை ! காரணம் முதலில் சென்ற குண்டு மனிதர் அப்படியே சிக்கிவிட்டாராம். அவரால் வெளியேயும் செல்லமுடியவில்லை. திரும்ப உள்ளேயும் வர முடியாத, நிலை தோன்றியுள்ளது(. படங்களைப் பாருங்கள் மேட்டர் புரியும்)

இப்படி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில், அங்கே வந்த காவலாளிகள் இதனைக் கண்டுவிட்டார்கள். இறுதியில் காவலாளிகளின் உதவியோடு தான் இந்த மனிதரை அவர்கள் வெளியே இழுத்து எடுத்துள்ளார்கள் என்றால் பாருங்களேன். இந்தவிடையத்தில் இவர் மட்டும் அவசரப்படாமல், மற்றவர்களை முதலில் செல்லவிட்டிருந்தால், குறிப்பிட்ட குண்டு மனிதர் கடைசியாக செல்லும்வேளை, அவரை அவர்கள் இழுத்து எடுத்துக்கொண்டு இவ்வேளை சிறையை விட்டு, சிட்டுக் குருவியாட்டம் பறந்திருப்பார்களே ! என்ன செய்வது, சிலரின் அவசரப் புத்தி இப்படி எல்லோரையும் கவுத்துவிடும்போல இருக்கே ! அதுசரி தமிழர்களுக்கும் இந்த குண்டு மனிதருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ தெரியாது ! ஆராய்ந்தால் நல்லா இருக்கும் !

 

SHARE