பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்துவதாக கூறி பெண் ஒருவர், அந்தக் குழந்தையை பிடித்து நடக்க வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (வீடியோ இணைப்பு)

441
பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்துவதாக கூறி பெண் ஒருவர், அந்தக் குழந்தையை பிடித்து நடக்க வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகன் மாவட்டத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த குழந்தையின் பெற்றோர், குழந்தையை தூக்கிக் கொண்டு மந்திர தந்திர வித்தைகளில் வல்லமை பெற்றதாக கருதப்படும் 50 வயது பெண்மனி ஒருவரிடம் சென்றுள்ளனர்.

அந்த பெண்மணி பச்சிளம் சிசுவின் கழுத்தை தன் கைகளால் பிடித்து நடக்க வைத்துள்ளார்.

இந்த முட்டாள்தனத்தை சுற்றியிருந்த மக்கள் திகைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

கூட்டத்தில் இருந்த நபர், இந்தக் கொடுமையை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மோரிகன் மாவட்ட பொலிசில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சூனியக்காரி உட்பட 2 பெண்களைக் கைது செய்து, வலியில் அலறிக் கொண்டிருந்த அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

SHARE