பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும், அற்புதராசாமீது மிருகத்தனமாய் தாக்குதல்

508

 

20120927-035319-PM

மட்டக்களப்பு களுதாவளயில் நேற்று முன்தினம் (25/12/2014)மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பிள்ளையான் கூட்டம்  நடாத்தினார். வழமைபோன்று பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும்,  செல்வியும் மகிந்தவுக்கு வக்காளத்து வாங்கி பேசிவிட்டு அமர்ந்தபின் பிள்ளையான் பேச்சைத் தொடந்தார்.

 Kirankulam-1  Tmvp-01

அவர்மகிந்தவினால் சமாதானம் வந்துள்ளதாகவும் அபிவிருத்தி பிரமாதமாகவுள்ளதாகவும் கொடுத்தபணத்திற்கு ஏதோபேசவேண்டும் என்றநோக்கில் பேசுக்கொண்டிருந்தார்.அந்த வேளையில் களுதாவளை 4ம் வட்
டாரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளைஅற்புதராசா என்ற இளைஞன் பிள்ளையானிடம் மகிந்தவைப்பற்றி எங்களுக்குதெரியும் நீ செய்த கொலைகளையும் கொள்ளைகளையும் பற்றி  கூறு பார்கலாம் புலிகள் இல்லாவிட்டால் உன்னால் அரசியலுக்கு வந்திருக்கமுடியுமா? உத்தமன் போல் அபிவிருத்தியை கதைக்கும் உனக்கு என்னயோக்கியம் இருக்கும்கிறது என பலகேள்விகளை அந்த இளைஞர் கேட்டhன்

அப்போது வெட்கித்தலைகுனிந்த பிள்ளையான்கேள்விகேட்ட இளஞரை தூக்கி வேனில் ஏற்றுமாறு சகபாடி பிரசாந்தனிடம் கூறினார் .

உடனே அந்த இளைஞன் ஓடினார் பின்தொடர்ந்த பிள்ளையான் ஒட்டுக்குளுவினர் அந்த இளைஞரான அந்தோனி அற்புதராசாமீது மிருகத்தனமாய் தாக்குதல் மேற்கொண்டதால் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடாத்தியபிள்ளையான் ஒட்டுக்குளுவினர்மீது பொலீசார் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை என்பது ம் குறிப்பிடத்தக்கது.

SHARE