புகையிரத திணைக்களத்தில் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை

14

 

புகையிரத திணைக்களத்தில் சுமார் 7,000 ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக திணைக்களம் கூறுகிறது.

இதனால், இயக்க நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

காமினி செனவிரத்ன
சுமார் 21,000 ஊழியர்களைக் கொண்டிருக்க வேண்டிய புகையிரத திணைக்களத்தில் தற்போது 14,000 ஊழியர்கள் மாத்திரமே இருப்பதாக ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE