புங்குடுதீவு மாணவி கற்பழிப்புப் படுகொலைக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது சந்தேகம்

152

 

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்துக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருக்கக் கூடும் என்று தமிழ் பேசும் மக்களில் ஒரு தொகையினர் வலுவாக சந்தேகிக்கின்றனர் என்று அறிய முடிகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை பிரதி அமைச்சருமான ஹசன் அலி தெரிவித்து உள்ளார்

tevu1

வித்தியா படுகொலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று இவரின் தனிப்பட்ட அவதானத்தை கேட்டு இருந்தது.

அப்போது இவர் தெரிவித்தவை வருமாறு:-

“ இது உண்மையில் பாரதூரமான துன்பியல் சம்பவமே ஆகும். இச்சம்பவத்தை தொடர்ந்து வட மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பல வழிகளிலும் பெரிதும் குழம்பிப் போய் உள்ளது.

இந்நிலையில் வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்திக் குளிர் காய வேண்டும் என்று நினைக்கின்ற இனவாத சக்திகள் இக்கொடூரத்துக்கு பின்னால் இருக்கலாம் என்று தமிழ் பேசும் மக்கள் சந்தேகிக்கவே செய்கின்றனர். குறிப்பாக இக்கொடுமையை புரிந்தவர்களில் முக்கியமான ஒருவராக அடையாளம் காணப்பட்டு இருக்கின்ற புலம்பெயர் தமிழருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இருக்கக் கூடிய நெருக்கத்தை காட்டுகின்ற புகைப்படங்கள் சமூக இணைப்புத் தளங்கள் ஊடாக வெளிக் கொணரப்பட்டு உள்ளன. புகைப்படங்கள் படம் பிடிக்கப்பட்டு இருக்கின்ற விதம் சந்தேகம் நியாயமானதுதான் என்று எண்ண வைக்கின்றது.

இதே நேரம் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. தென்னிலங்கை மக்களுக்கு புலிப் பீதியை மீண்டும் கிளப்பி உள்ளார் முன்னாள் ஜனாதிபதி. இவ்விதமான ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்துதான் புலிகள் முன்பு தோற்றம் பெற்றனர் என்று இவர் தெரிவித்து உள்ளார். இவரின் கருத்துக்கள் அரசியல் உள்நோக்கத்துடனேயே தெரிவிக்கப்பட்டு உள்ளன என்று அரசியல் அவதானிகள் நம்புகின்றார்கள். ”

SHARE