புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் நயினாதீவில் முக்கியஸ்தர் கைது.

344

 தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரது உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவரை கைது செய்தோம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

நயினாதீவை சேர்ந்த கு.நாகதர்சன் (25) என்ற வாலிபரே கைதாகியுள்ளார். வித்தியா கொலை காமுகர்களின் நெருங்கிய நண்பனாக இவர் இருந்துள்ளார்.

பிரதான குற்றவாளிகளில் ஒருவனான பிரதேசசபை பணியாளனுடன் இந்த நபரும் பணியாற்றி வந்துள்ளார். வேலணை பிரதேசசபையின் நயினாதீவு உபஅலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று மதியம் இவர் அலுவலகத்தில் இருந்த சமயத்தில் அதிரடியாக நுழைந்த குற்றப்புலனாய்வு பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஏற்கனவே ஒன்பதுபேர் கைதாகியுள்ளமை தெரிந்ததே.veteja

SHARE