புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

226

 

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபர் என்,கே.இலங்ககோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Swiss-Kumar-1

மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் அறிக்கையை பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

வித்தியா கொலை வழக்கு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு என்ற வகையில் மூன்று தரப்பினரின் கீழ் விசாரணை இடம்பெற்று வருகின்றது.

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் சுவிஸ் குமாரை பிரதேசவாசிகள் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பின் யாழ். மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தரவிற்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் சாட்சியம் கிடைத்துள்ளது.

அதேபோல வித்தியா காணாமல் போன நாளன்று அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யச் சென்ற நேரத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதத்தின் பிரதிபலனாகவே விசாரணை நடத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டமை தொடர்பிலும் விசாரணை ஊடாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரொருவரை விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ள உயர் அதிகாரி தொடர்பில் இதுவரை எவ்வித ஒழுக்காற்று விசாரணையும் இடம்பெறவில்லை. பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.

SHARE