புதிய அரசாங்கத்துக்கு கோத்தபாய வாழ்த்து

141
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் கோத்தபாய தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார்.

அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, நாட்டினுள் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எங்கள் ஆதரவை வழங்குவோம் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

SHARE