புதிய இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா நியமனம்

400

 

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை இராணுவத்தின் 21வது தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க எதிர்வரும் 22 ம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.

இவர் ஓய்வு பெற்றவுடன் புதிய இராணுவ தளபதி, நாளை மறுதினம் தனது கடமையை பொறுப்பேற்க உள்ளார்.

புதிய இராணுவ தளபதிக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார்.

வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை சுட்டுக்கொல்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அனுப்பிய மேஜர் ஜெனரல் கிருசாந்த டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE