புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

325
சகல அரசியல் கட்சிகளினதும் யோசனைகள் உள்ளடக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

20வது சீர்த்திருத்தத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து இறுதி அறிக்கை ஒன்றை முன்வைக்க அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்பித்துள்ளார்.

கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கான அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான சரத் அமுனுகம, எஸ்.பீ. திசாநாயக்க, லக்ஷ்மண் கிரியெல்ல, கபீர் ஹாசீம், சம்பிக்க ரணவக்க, கயந்த கருணாதிலக்க, ரவுப் ஹக்கீம், பழனி திகாம்பரம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE