புத்தபகவானை தூற்றும் யுடியூப் வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை கண்டனம்

505

புத்தபகவானையும் பௌத்த மதத்தையும் ராசிக் என்பவர் தூற்றுவதாக யுடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

யாரும் ஏனைய மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சனம் செய்தவற்கோ உரிமையில்லை.

இந்தநிலையில் யுடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிடுவதாக இலங்கை முஸ்லிம் சபை தெரிவித்துள்ளது.

2013 ஜூன் மாதத்தில் தரவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவில் ராசிக் என்பவர் புத்தபகவானையும் பௌத்தத்தையும் தூற்றுவதாக காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமை பொறுத்தவரை, அது பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்துகிறது.

அத்துடன் எந்த முஸ்லிமும் வேறு மதத்தை தூற்றுவதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.

இலங்கை பல்லின நாடு என்ற வகையில் அங்கு பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அனைத்து மதத்தினரும் பரஸ்பர மரியாதை மற்றும் கலாசார விழுமியங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இதனை மீறிச்செயற்படுவோர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லிம் சபை கோரியுள்ளது.

 

SHARE