புனர்வாழ்வு பெற்ற ஆறு முன்னாள் போராளிகள் விடுதலை

161

 

புனர்வாழ்வு பெற்ற ஆறு முன்னாள் போராளிகள் விடுதலை

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு

பெற்ற ஆறு முன்னாழ் போராளிகள் இன்று 30-06-2015 விடுதலை

செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.

இன்நிகழ்வானது பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி

வி.வி.எச்.பெனான்டோ தலமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு விடுதலை செய்யப்பட்ட

போராளிகளின் பெற்றோர் மனைவி பிள்ளைகள் சமூகமளித்திருந்தமை

குறிப்பிடத்தக்கது.

unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11) unnamed (12) unnamed (13) unnamed (14) unnamed (15) unnamed (16)

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 12000

போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்த பூந்தோட்ட

புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி வி.வி.எச்.பெனான்டோ தொடர்ந்து

ஒரு பெண் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு

உதவிசெய்தவர்கள் என 56 பேர் புனர்வாழ்வு பெற்று வருவதாக தெரிவித்ததுடன்.

முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் பயிற்சிகளையும் வழங்கி வருவதாக

தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு சுய தொழில் பயிற்சிகளை

வழங்கிவரும் பயிற்சியாளர் அனுர ரத்னாயக்கா கருத்து தெரிவிக்கையில் எனது

கணவர் நான் இருவரும் இராணுவத்தில் பணி புரிவதாகவும் தனது சகோதரர்கள் இருவர்

இராணுவத்தில் இருந்து யுத்தத்தில் பலியாகிவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர் முன்னாள்

விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சுயதொழில் பயிற்சிகள் வழங்கி அவர்களை

இந்த சமூகத்துடன் இணைப்பதனூடாக இன மொழி பேதமின்றி இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப

முடியும் என சுட்டிக்காட்டினார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி அகிலப்பிள்ளை தவராசா கருத்து

தெரிவிக்கையில் ஒருவருட புனர்வாழ்வின் பின் எனது குடும்பத்துடன் இணைவது

மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர் தான் சமூகத்தில் இணைவதைப்போல் சக

போராளிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE