புன்னகை தேசம் பட புகழ் ஹர்ஷவர்தனை நியாபகம் இருக்கா, அவரது வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?- லேட்டஸ்ட் க்ளிக்

338

 

ஷாஜகான் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் புன்னகை தேசம்.

தருண் குமார், குனல் சிங், ஹர்ஷவர்தன், சினேகா, ப்ரீத்தா விஜயகுமார், தாமு என பலர் நடிக்க இப்படம் வெளியாகி இருந்தது.

தங்களது பெற்றோர்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு அளிக்காததால் கனவை நோக்கி பயணிக்க சென்னை வருகிறார்கள் 3 நண்பர்கள்.

அவர்கள் வாழ்க்கையில் சாதிக்க 4வது ஒரு நண்பர்கள் உதவுகிறார். அவரால் கனவை நோக்கி பயணிக்க சென்னை வந்தவர்கள் சாதிக்கிறார்கள்.

இதுதான் படத்தின் முக்கிய கதை.

ஹர்ஷவர்தன்
இந்த படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஹர்ஷவர்தன். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவர் மந்திரன், புன்னகை தேசம், மானசீக காதல் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

சாந்தி என்பவரை திருமணம் செய்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு இவரது மனைவி சாந்தி கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்ளில் வலம் வருகிறது.

SHARE