புரோ கபடி: மும்பை முதல் தோல்வி

188
2-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 34-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் மோதின. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் அணியினர், ஒரு வழியாக மும்பை அணியின் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 40 நிமிடங்கள் முடிவில் ஜெய்ப்பூர் அணி 35-25 என்ற புள்ளி கணக்கில் மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த மும்பை அணிக்கு இது தான் முதல் சறுக்கலாகும்.

ஐதராபாத் தெலுங்கு டைட்டன்ஸ்- புனே பால்டன் இடையிலான மற்றொரு திரிலிங்கான ஆட்டம் 29-29 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து புள்ளி பட்டியலில் ஐதராபாத் அணி 42 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை 40 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இன்றைய ஆட்டங்களில் டெல்லி-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), பாட்னா-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன

SHARE